J.A. George / 2021 ஜூலை 16 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய அணியுடனான் கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், விக்கெட் காப்பாளருமான குசல் ஜனித் பெரேரா விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அவரது தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவர் இந்தியாவுனான தொடர்களில் பங்கேற்கமாட்டார் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ, இந்தியாவுடனான ஒருநாள் போட்டித்தொடரில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (15) இடம்பெற்ற பயிற்சி போட்டிகளின்போது, இடது கணுக்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவர் இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.
எனினும், இந்தியாவுடனான இருபதுக்கு 20 தொடரில் அவர் பங்கேற்பார் என, ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
44 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago