Shanmugan Murugavel / 2016 மார்ச் 16 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் பி.என்.பி பரிபஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்கள் பிரிவில், காலிறுதிச் சுற்றுக்கு செரீனா வில்லியம்ஸ், அக்கினியஸ்கா ரட்வன்ஸ்கா, சிமோனா ஹலெப், பெற்றா கிவிட்டோவா ஆகியோர் தகுதி பெற்றுள்ளதோடு, ஆண்கள் பிரிவின் நான்காம் சுற்றுக்கு நொவக் ஜோக்கோவிக், ரஃபேல் நடால், கெய் நிஷிகோரி, ஜோ-வில்பிரைட் டிசொங்கா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
பெண்களின் நான்காம் சுற்றுப் போட்டிகளில், உலகின் முதல்நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 6-2, 6-2 என்ற செட் கணக்கில் உக்ரேனின் கட்டெரைனா பொன்டரங்கோவை தோற்கடித்ததுடன், உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான போலந்தின் அக்னியஸ்கா ரட்வன்ஸ்கா, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் சேர்பியாவின் ஜெலேனா ஜன்கோவிக்கை தோற்கடித்ததுடன், உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான சிமோனா ஹலெப், 6-3, 1-0 என்ற செட் கணக்கில் முன்னிலையில் இருந்தபோது எதிர் வீராங்கனையான செக் குடியரசின் பர்போரா ஸ்ரைகோவா போட்டியிலிருந்து விலகியதால் ஹலெப் வெற்றி பெற்றதுடன், உலகின் ஒன்பதாம் நிலை வீராங்கனையான செக்.குடியரசின் பெற்றா கிவிட்டோவா, 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஐக்கிய அமெரிக்காவின் நிக்கோல் கிப்ஸை தோற்கடித்தார்.
ஆண்களுக்கான மூன்றாம் சுற்றுப் போட்டிகளில், உலகின் முதல் நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிக், 7-5, 7-5 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்ரைபரை போராடி வென்றதுடன், உலகின் ஐந்தாம் நிலை வீரரான ஸ்பெய்னின் ரஃபேல் நடால், 6-0, 7-6 என்ற செட் கணக்கில் போராடி சகநாட்டு வீரரான பெர்னாண்டோ வெர்டாசோவை தோற்கடித்ததோடு, உலகின் ஆறாம் நிலை வீரரான ஜப்பானின் கெய் நிஷிகோரியும் 7-6, 7-6 என்ற செட் கணக்கில் ஐக்கிய அமெரிக்காவின் ஸ்டீவ் ஜோன்சனை வென்றதொடு, உலகின் ஒன்பதாம் நிலை வீரரான பிரான்ஸின் ஜோ-வில்பிரைட் டிசொங்கா, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஐக்கிய அமெரிக்காவின் சாம் குவாரேரியைத் தோற்கடித்திருந்தார்.
19 minute ago
25 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
25 minute ago
1 hours ago