2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இந்தியா - பாகிஸ்தான் போட்டி சந்தேகத்தில்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 02 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக இருபதுக்கு-20 தொடரில், இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்குமிடையில், தர்மசாலாவில் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ள போட்டி, அங்கு இடம்பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்திய மத்திய அரசாங்கத்துக்கு, ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சர் எழுதியுள்ளதாகக் கூறப்படும் கடிதத்தாலேயே இச்சந்தேகம் எழுந்துள்ளது. பதன்கொட் விமானத் தரிப்புப் பகுதியில், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களெனக் கருதப்படும் ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து, தர்மசாலாவில் அப்போட்டி இடம்பெறக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

பதன்கொட் தாக்குதல் போல பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த படையினர், ஜம்மு - காஷ்மிரில் தங்கள் உயிர்களை விட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அதன் காரணமமாக, தர்மசாலாவில் அப்போட்டி இடம்பெறக்கூடாது எனத் தெரிவித்துள்ளது. அத்தொடரில் 8 போட்டிகளை தர்மசாலா நடத்தவுள்ள நிலையில், பாகிஸ்தான் போட்டிக்கு மாத்திரமே எதிர்ப்புத் தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், கிரிக்கெட்டையும் அரசியலையும் குழப்ப வேண்டாமென, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளரும் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியின் உறுப்பினருமான அனுரக் தாக்கூர் கோரியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .