2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இந்தியாவின் மேற்கிந்தியத் தீவுகளுக்கான ஏழு வாரத் தொடர் ஜூலை 6இல் ஆரம்பம்

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 02 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கான, நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் இரண்டு பயிற்சிப் போட்டிகள் உள்ளடங்கிய ஏழு வாரத் தொடருக்காக, எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி இந்திய அணி செல்லவுள்ளது. அன்டிகுவா, ஜமைக்கா, சென். லூசியா, ட்ரினிடாட்டில் நான்கு டெஸ்ட் போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

சென்ட்.கிட்ஸில், ஜூலை 9ஆம் திகதி, இரண்டு நாள் பயிற்சிப் போட்டியுடன் ஆரம்பிக்கும் தொடரானது, அதேயிடத்தில் ஜூலை 14ஆம் திகதி ஆரம்பிக்கும் மூன்று நாள் பயிற்சிப் போட்டியுடன் தொடருகின்றதோடு, ஜூலை 21ஆம் திகதி முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதோடு, ஜூலை 30ஆம் திகதி இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதோடு, ஓகஸ்ட் 9ஆம் திகதி மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதோடு, ஓகஸ்ட் 18ஆம் திகதி நான்காவது டெஸ்ட் போட்டி ஆரம்பிக்கின்றது.

மேற்படி தொடரை ஆறு மாதங்களுக்கு முன்பே, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையும் உறுதிப்படுத்தியபோதும், மேற்படி தொடரானது, ஜூன் 30ஆம் திகதி ஆரம்பிக்கும் கரீபியன் பிறீமியர் லீக்குக்கிடையில் வருவதால், தொடரின் திட்டம் அறிவிக்கப்படுவது தாமதப்படுத்திருந்தத்து. ஏனெனில், ஒரே மைதானத்தில் இரண்டு தொடர்களினதும் போட்டிகள் வருவதை தவிர்க்க, கரீபியன் பிறீமியர் லீக் அதிகாரிகளுடன் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .