2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இன்று ஆரம்பிக்கிறது மூன்றாவது டெஸ்ட்

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 01 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது இந்தூரில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

நான்கு போட்டிகள் கொண்ட இத்தொடரில், முதலிரண்டு போட்டிகளையும் ஏற்கெனவே தோற்ற அவுஸ்திரேலியா தொடரைச் சமப்படுத்துவதற்கு இப்போட்டியில் வென்று, அடுத்த போட்டியிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்திலுள்ளது.

இதில், தாயாரின் சுகவீனம் காரணமாக அணித்தலைவர் பற் கமின்ஸ் இப்போட்டியைத் தவறவிடுகின்ற நிலையில், இப்போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் அணித்தலைவராகக் கடமையாற்றவுள்ள்ளார்.

இந்நிலையில், கமின்ஸுக்குப் பதிலாக மிற்செல் ஸ்டார்க் அணிக்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்படுவதோடு மற் றென்ஷோவுக்குப் பதிலாக கமரோன் கிறீன் அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கமாக இந்திய அணியைப் பொறுத்த வரையில் லோகேஷ் ராகுலை ஷுப்மன் கில் பிரதியிடுவாரா அல்லது ராகுலுக்கு மேலும் வாய்ப்பு வழங்குவதா என்பதே பாரிய கேள்விக்குறியாக உள்ளது.

இப்போட்டிக்கான ஆடுகளமும் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் எனத் தெரிகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X