2025 மே 21, புதன்கிழமை

இன்று இறுதிப் போட்டி: நியூசிலாந்தா; அவுஸ்திரேலியாவா?

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 14 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் சர்வதேச கிரிகெட் சபையின் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரில்ல், டுபாயில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் நியூசிலாந்தும் அவுஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடாத்தவுள்ளன.

இதுவரையில் அவுஸ்திரேலியாவுடனான சர்வதேச கிரிக்கெட் சபையின் தொடர்களின் விலகல் முறையில் போட்டிகளில் நியூசிலாந்து வென்றதில்லை என்றபோதும், இம்முறை டிம் செளதி, ட்ரெண்ட் போல்ட், இஷ் சோதி, அடம் மில்ன், மிற்செல் சான்டெர் உள்ளடங்கிய நியூசிலாந்தின் பந்துவீச்சுவரிசையை அவுஸ்திரேலியா எதிர்கொள்வதிலேயே இப்போட்டியின் முடிவு பெரும்பாலும் தங்கியுள்ளது.

இரண்டு அணிகளும் ஏறத்தாழ சமபலமுள்ளவையாகக் காணப்படுகின்றபோதும், அவுஸ்திரேலியாவில் அடம் ஸாம்பாவின் நான்கு ஓவர்களும் முக்கியமானவையாகக் காணப்படுகின்றன.

அவுஸ்திரேலிய அணியில் மாற்றமிருக்காது என்று கருதப்படுவதுடன், நியூசிலாந்து அணியில் காயமடைந்த டெவோன் கொன்வேக்குப் பதிலாக டிம் செய்ஃபேர்ட் களமிறங்கவுள்ளார்.

டுபாயில் பனிப்பொழிவு பிரச்சினையாக இல்லாது எனக் கருதப்படும்போதும், நாணயச் சுழற்சியில் வெல்லும் அணியானது முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X