2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

இன்று ஒப்பந்தமாவாரா போல் பொக்பா?

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 28 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலி விளையாட்டுக் கழகமான ஜுவன்டஸ் அணியின் வீரரான போல் பொக்பாவை, அடுத்த 48 மணிநேரங்களுக்குள் ஒப்பந்தம் செய்ய எதிர்பார்ப்பதாக, மன்செஸ்டர் யுனைட்டெட் அணி நேற்றுத் தெரிவித்தது.

சுமார் 100 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்கள் பெறுமதியான தொகைக்கு அவரை ஒப்பந்தம் செய்வதற்கான தங்களது முயற்சியில், முக்கியமான வெற்றியொன்று கிடைத்ததாக, அக்கழகம் நேற்றுத் தெரிவித்தது.

எனினும், இது தொடர்பான அறிவிப்பு வெளியாகிய சில மணிநேரங்களிலேயே, போக்பாவை ஒப்பந்தம் செய்யும் தனது விருப்பத்தை, றியல் மட்ரிட் கழகம் மீண்டும் வெளியிட்டது. ஏற்கெனவே, றியல் மட்ரிட்டும் மன்செஸ்டர் யுனைட்டெட்டுமே இவரை ஒப்பந்தம் செய்வதற்கான போட்டியில் இருந்ததாகக் கருதப்பட்ட நிலையில், யுனைட்டெட் கழகம் முன்னிலை பெற்றதாகக் கருதப்பட்டது.

இது தொடர்பான இறுதி முடிவு, இன்று அல்லது நாளை தெரியவரலாம் என, ஒப்பந்தங்கள் தொடர்பாக ஆராய்ந்துவரும் விளையாட்டு விமர்சகர்கள் தெரிவிப்பதோடு, யுனைட்டெட் கழகத்துக்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .