Shanmugan Murugavel / 2021 ஜூன் 20 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சென். லூசியாவில் நேற்று முன்தினம் ஆரம்பமான இரண்டாவது டெஸ்டின் இரண்டாம் நாள் முடிவில் முன்னிலையில் தென்னாபிரிக்கா காணப்படுகின்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா, குயின்டன் டி கொக்கின் 96, அணித்தலைவர் டீன் எல்கரின் 77 ஓட்டங்களோடு தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 298 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், கைல் மேயர்ஸ், கேமார் றோச் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும், ஷனொன் கப்ரியல் 2, ஜேடன் சியல்ஸ் மற்றும் ஜேஸன் ஹோல்டர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்நிலையில், தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், வியான் முல்டரிடம் 3, ககிஸோ றபாடாவிடம் 2, லுங்கி என்கிடியிடம் 2, கேஷவ் மஹராஜ்ஜிடம் 2, அன்றிஜ் நொர்ட்ஜேயிடம் ஒரு விக்கெட் என சகல விக்கெட்டுகளையும் இழந்து 149 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில், ஜெர்மைன் பிளக்வூட் 49, ஷே ஹோப் 43 ஓட்டங்களைப் பெற்றனர்.
22 minute ago
31 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
31 minute ago
36 minute ago
2 hours ago