2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியிலும் இலங்கையை வென்றது அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 27 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைப் பெண்கள் அணிக்கும் அவுஸ்திரேலியப் பெண்கள் அணிக்குமிடையிலான ஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில், அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ளது.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 59 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஆரம்பத்திலிருந்தே மெதுவாகத் துடுப்பெடுத்தாடிய அவ்வணி, விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. பின்னர் இறுதி 44 பந்துகளில் 14 ஓட்டங்கள் மாத்திரமே, இலங்கை சார்பாகப் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தன.

துடுப்பாட்டத்தில் லசந்தி மதுஷானி பெற்ற 17 (25) ஓட்டங்களே அதிகபட்ச ஓட்டங்களாக அமைந்தன. ஏனையவர்களில் எவரும் இரட்டைப்படை ஓட்டங்களைக் கூடப் பெற்றிருக்கவில்லை.  பந்துவீச்சில் கிறிஸ்டன் பீம்ஸ், 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

60 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 8.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் எலைஸ் வில்லனி 25 பந்துகளில் ஆட்டமிழக்காமல்  34 ஓட்டங்களையும் பெத் மூனி 24 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களையும் பெற்றனர்.

இப்போட்டியின் நாயகியாக, கீத் பீம்ஸ் தெரிவானார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .