Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 03 , பி.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் சம்பியன்ஸ் கிண்ண விலகல் முறையிலான தொடரில், கொழும்பு குதிரைப்பந்தயத் திடல் மைதானத்தில் சனிக்கிழமை (04) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் கொழும்பு செளந்தர்ஸ் விளையாடுக் கழகத்தை யாழ்ப்பாணம் நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம் எதிர்கொள்ளவுள்ளது.
சம்பியனாகும் அணிக்கு1,000,000 ரூபாய் பணப்பரிசில் வழங்கப்படவுள்ளது. சென். மேரிஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதற்தடவையாகும்.
அரையிறுதிப் போட்டிகளில் பெனால்டியில் ஜாவா லேனை 5-4 என்ற ரீதியில் வென்று மேரிஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதுடன், மாவனல்ல விளையாட்டுக் கழகத்தை 4-2 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு செளந்தர்ஸ் முன்னேறியிருந்தது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago