Shanmugan Murugavel / 2021 மே 05 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி தகுதி பெற்றுள்ளது.
பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனுடனான அரையிறுதிப் போட்டியில், 4-1 என்ற மொத்த கோல் கணக்கில் வென்றமையைத் தொடர்ந்தே முதற்தடவையாக இறுதிப் போட்டிக்கு சிற்றி தகுதி பெற்றுள்ளது.
முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றிருந்த சிற்றி, தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றே, 4-1 என்ற மொத்த கோல் கணக்கில் இறுதிப் போட்டிக்கு சிற்றி தகுதிபெற்றிருந்தது.
சிற்றி சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் றியாட் மஹ்ரேஸ் பெற்றிருந்தார்.
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026