2025 ஜூலை 21, திங்கட்கிழமை

இலங்கைகெதிரான மூன்றாவது டெஸ்டில் முன்னிலை இந்தியா

Editorial   / 2017 டிசெம்பர் 03 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், டெல்லியில் நேற்று ஆரம்பமான மூன்றாவது போட்டியின் இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா முன்னிலை பெற்றுக் காணப்படுகிறது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, தமது முதலாவது இனிங்ஸில், 7 விக்கெட்டுகளை இழந்து 536 ஓட்டங்களைப் பெற்றபோது தமது ஆட்டத்தை இடைநிறுத்தியது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் விராட் கோலி 243, முரளி விஜய் 155 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், லக்‌ஷான் சந்தகான் 4, லஹிரு கமகே 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

குறித்த இந்திய அணியின் இனிங்ஸின்போது மாசடைந்த வளி காரணமாக, 17 தடவைகள் ஒரு தடவையும் இன்னொரு தடவை ஐந்து நிமிடங்களும் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கையணி, இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவின்போது 3 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில், அஞ்சலோ மத்தியூஸ் 57, அணித்தலைவர் தினேஷ் சந்திமால் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக, டில்ருவான் பெரேரா 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X