2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இலங்கைக்கு வெற்றியிலக்கு 176 ஓட்டங்கள்

Shanmugan Murugavel   / 2022 செப்டெம்பர் 03 , பி.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் தற்போது நடைபெற்றுவரும் ஆப்கானிஸ்தானுடனான சுப்பர் 4 சுற்றுப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு இலங்கை 176 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் தசுன் ஷானக, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், ரஹ்மனுல்லாஹ் குர்பாஸின் 84 (45), இப்ராஹிம் ஸட்ரானின் 40 (38), நஜிபுல்லா ஸட்ரானின் 17 (10), ரஷீட் கானின் 09 (07) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. பந்துவீச்சில், டில்ஷான் மதுஷங்க 2/37 [4], மகேஷ் தீக்‌ஷன 1/29 [4], அசித பெர்ணாண்டோ 1/34 [4], வனிடு ஹஸரங்க 0/23 [4] என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .