Editorial / 2017 நவம்பர் 19 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கொல்கத்தாவில் இடம்பெற்றுவரும் முதலாவது போட்டியின் இன்றைய நான்காவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, தமது முதலாவது இனிங்ஸில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், செட்டேஸ்வர் புஜாரா 52, ரித்திமான் சஹா 29, மொஹமட் ஷமி 24 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சுரங்க லக்மால் 4, டில்ருவான் பெரேரா, தசுன் ஷானக, லஹிரு கமகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 294 ஓட்டங்களைப் பெற்று, இந்திய அணியின் முதலாவது இனிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட 122 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. துடுப்பாட்டத்தில், ரங்கன ஹேரத் 67, அஞ்சலோ மத்தியூஸ் 52, லஹிரு திரிமான்ன 51, நிரோஷன் டிக்வெல்ல 35, அணித்தலைவர் தினேஷ் சந்திமால் 28 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், புவ்னேஷ்வர் குமார், மொஹமட் ஷமி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி, போதிய வெளிச்சமின்மை காரணமாக, இன்றைய நான்காம் நாள் ஆட்டம் இடைநிறுத்தப்படும்போது, ஒரு விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களைப் பெற்று, இலங்கையணியின் முதல் இனிங்ஸை விட 49 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
தற்போது களத்தில், லோகேஷ் ராகுல் 73, செட்டேஸ்வர் புஜாரா 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது உள்ளனர். ஷீகர் தவான் 94 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். வீழ்த்தப்பட்ட விக்கெட்டை தசுன் ஷானக கைப்பற்றியிருந்தார்.
45 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago