Editorial / 2018 நவம்பர் 07 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், காலியில் நேற்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.
தமது முதலாவது இனிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 321 ஓட்டங்களைப் பெற்றவாறு இன்றைய இரண்டாம் நாளை ஆரம்பித்த இங்கிலாந்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 342 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், பென் போக்ஸ் 107, சாம் கர்ரன் 48, கீட்டன் ஜெனிங்ஸ் 46, அடில் ரஷீட் 35, ஜோ றூட் 35 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டில்ருவான் பெரேரா 5, சுரங்க லக்மால் 3, ரங்கன ஹேரத், அகில தனஞ்சய ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை, 203 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. துடுப்பாட்டத்தில், அஞ்சலோ மத்தியூஸ் 52, தினேஷ் சந்திமால் 33, நிரோஷன் டிக்வெல்ல 28 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மொயின் அலி 4, ஜேக் லீக், அடில் ரஷீட் ஆகியோர் தலா 2, ஜேம்ஸ் அன்டர்சன், சாம் கர்ரன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இந்நிலையில், தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து, இன்றைய இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் விக்கெட் இழப்பின்றி 38 ஓட்டங்களை பெற்று 177 ஓட்டங்கள் முன்னிலையுடன் காணப்படுகிறது. தற்போது களத்தில், கீட்டன் ஜெனிங்ஸ் 26 ஓட்டங்களுடனும் றோறி பேர்ண்ஸ் 11 ஓட்டங்களுடனும் காணப்படுகின்றனர்.
11 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago
2 hours ago