2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டை இறுதிப் பந்தில் வென்ற நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 13 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டை நியூசிலாந்து இறுதிப் பந்தில் வென்றுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், கிறைஸ்ட்சேர்ச்சில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இப்போட்டியின் இன்றைய ஐந்தாம் நாளை, தமது இரண்டாவது இனிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த நியூசிலாந்து, கேன் வில்லியம்ஸனின் ஆட்டமிழக்காத 121, டரைல் மிற்செல்லின் 81 ஓட்டங்களோடு 285 ஓட்டங்களென்ற வெற்றியிலக்கை 8 விக்கெட்டுகள் இழப்புடன் அடைந்தது. பந்துவீச்சில், அசித பெர்ணாண்டோ 3, பிரபாத் ஜெயசூரிய 2 மற்றும் கசுன் ராஜித, லஹிரு குமார ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இப்போட்டியின் நாயகனாக டரைல் மிற்செல் தெரிவானார்.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

இலங்கை: 355/10 (துடுப்பாட்டம்: குசல் மென்டிஸ் 87, திமுத் கருணாரத்ன 50, அஞ்சலோ மத்தியூஸ் 47, தனஞ்சய டி சில்வா 46, தினேஷ் சந்திமால் 39 ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 5/64, மற் ஹென்றி 4/80, மிஷெல் பிறேஸ்வெல் 1/17)

நியூசிலாந்து: 373/10 (துடுப்பாட்டம்: டரைல் மிற்செல் 102, மற் ஹென்றி 72, டொம் லேதம் 67 ஓட்டங்கள். பந்துவீச்சு: அசித பெர்ணாண்டோ 4/85, லஹிரு குமார 3/76, கசுன் ராஜித 2/104, பிரபாத் ஜெயசூரிய 1/46)

இலங்கை: 302/10 (துடுப்பாட்டம்: அஞ்சலோ மத்தியூஸ் 115, தனஞ்சய டி சில்வா ஆ.இ 47, தினேஷ் சந்திமால் 42 ஓட்டங்கள். பந்துவீச்சு: பிளையர் டிக்னர் 4/100, மற் ஹென்றி 3/71, டிம் செளதி 2/57)

நியூசிலாந்து: 285/8 (துடுப்பாட்டம்: கேன் வில்லியம்ஸன் ஆ.இ 121, டரைல் மிற்செல் 81 ஓட்டங்கள். பந்துவீச்சு: அசித பெர்ணாண்டோ 3/63, பிரபாத் ஜெயசூரிய 2/92, கசுன் ராஜித 1/60, லஹிரு குமார 1/61)

போட்டியின் நாயகன்: டரைல் மிற்செல்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X