Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 21 , பி.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரான சுயாதீனமாகச் செயற்படுவதற்கு, சந்திக ஹத்துருசிங்கவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை உறுதியளித்துள்ளது.
கருத்துத் தெரிவித்த இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால, உலகின் சிறந்த பயிற்சியாளரொருவரைப் பணிக்கமர்த்தி விட்டு, அவரது பணியை அவர் ஆற்றுவதற்கான சுதந்திரத்தை வழங்கத் தவறுவதில் எதுவிதப் பிரயோசனமுமில்லை எனக் கூறியுள்ளார்.
இதேவேளை, 2000ஆம் ஆண்டுக்கு பிந்தைய இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர்களில் மார்வன் அத்தப்பத்து மாத்திரமே சிங்களம் பேசக்கூடியவராக இருந்த நிலையில், இலங்கையணியிலுள்ள வீரர்களுடன் சிங்களத்தில் உரையாடக் கூடிய வகையில் சந்தி ஹத்துருசிங்க இருப்பதையும் நன்மையாக திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்த சந்திக ஹத்துருசிங்க, இலன்கையின் தேசிய கட்டமைப்பில் நம்பிக்கையளிக்கக் கூடிய திறமை இருப்பதாகக் கூறியதுடன் தொடர்ச்சியான தேர்வு தேவை எனத் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷின் பயிற்சியாளராகவிருந்த இரண்டரை ஆண்டுகளில், அங்கிருந்த கிரிக்கெட் கட்டமைப்புகளில் குறிப்பிடத்தக்களவு தாக்கம் செலுத்திய சந்திக ஹத்துருசிங்க தேர்வாளராகவும் இருந்திருந்தார். இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் சபையால் சுதந்திரம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டமையையடுத்தே பயிற்சியாளராக வர சம்மதித்திருந்தார்.
இந்நிலையில், பயிற்சியாளர்கள் மீது அண்மைய ஆண்டுகளில் இலங்கை கிரிக்கெட் சபை தாக்கம் செலுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் 10 தலைமைப் பயிற்றுவிப்பாளர்களை இலங்கை கொண்டிருந்ததுடன், தலையீடு மேற்கொள்ளப்பட்டமை காரணமாகவே இறுதியாக பயிற்சியாளராகவிருந்த கிரஹாம் போர்ட் பதவி விலகியிருந்தார் என தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
9 hours ago