Editorial / 2017 ஓகஸ்ட் 30 , பி.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை பதினொருவர் அணிக்கும் உலக பதினொருவர் அணிக்குமிடையில், இலங்கை கிரிக்கெட் சபையால் நடத்தப்படவிருந்த இருபதுக்கு-20 போட்டி, இலங்கை கிரிக்கெட் சபையால் பிற்போடப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் இலங்கையில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் நிதி திரட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போட்டி, கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில், செப்டெம்பர் 8ஆம் திகதி இடம்பெறவிருந்தது.
எனினும், தேசிய அணிகள், அண்மைக்காலத்தில் அதிகளவிலான போட்டிகளில் பங்குபற்றி வருவதால், இந்தப் போட்டியைப் பிற்போடுவதாக, இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்தது. ஆனால், இந்தப் போட்டி எப்போது இடம்பெறுமென்பதை, அச்சபை இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.
இந்தத் தொடரில் சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான், ரொபின் உத்தப்பா, மிஸ்பா உல் ஹக், ஷகிட் அப்ரிடி உள்ளிட்டோர் சம்மதம் தெரிவித்ததாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
43 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago