2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இலங்கையை வீழ்த்துமா மேற்கிந்தியத் தீவுகள்?

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 29 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது, காலியில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

முதலாவது போட்டியில் இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள மேற்கிந்தியத் தீவுகள் தடுமாறிய நிலையில், இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரை சமப்படுத்துவதற்காக இப்போட்டியை மேற்கிந்தியத் தீவுகள் வெல்ல வேண்டுமானால் அவ்வணியின் துடுப்பாட்டவீரர்கள் மேம்பட்ட பெறுபேற்றை வெளிப்படுத்த வேண்டும்.

தவிர, இலங்கையணித்தலைவர் திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா போன்றோரது விக்கெட்டுகளையும் விரைவாக கைப்பற்ற வேண்டிய தேவை காணப்படுகின்றது.

இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணியில் மாற்ற இருக்காது எனக் கருதப்படுகின்ற நிலையில், ஓய்வு வழங்கப்பட்டுள்ள துஷ்மந்த சமீரவுக்குப் பதிலாக இலங்கை அணியில் விஷ்வ பெர்ணான்டோ விளையாடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X