2025 மே 21, புதன்கிழமை

இலங்கையை வென்றது தென் ஆபிரிக்கா

Freelancer   / 2021 ஒக்டோபர் 30 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரின் ஷார்ஜாவில் இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் தென் ஆபிரிக்க அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென் ஆபிரிக்கா களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 142 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில், பத்தும் நிஸங்க 72 (58) ஓட்டங்களையும் சரித் அசலங்க 21 (14) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில், தப்ரேஸ் ஷம்சி, டுவைன் பிரிட்டோரியஸ் தலா 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

143 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி  19.5  ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் டெம்பா பவுமா 46 (46), டேவிட் மிலர் 23 (13) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்து வீச்சில் வனிது ஹசரங்க 03, துஷ்மந்த சமீர 02  விக்கெட்டுகளை கைப்பற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X