Editorial / 2017 ஜூலை 06 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 3ஆவது போட்டி, இன்று இடம்பெறவுள்ளது. ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இன்று காலை 9:45க்கு ஆரம்பிக்கவுள்ளது.
இத்தொடரின் முதலிரு போட்டிகளிலும், காலியில் இடம்பெற்றிருந்தன. முதலாவது போட்டியில் அதிர்ச்சித் தோல்வியடைந்த இலங்கை அணி, இரண்டாவது போட்டியில் பதிலடி வழங்கியது. இந்நிலையில், சமநிலையில் காணப்படும் தொடரில், யார் முன்னிலையைப் பெறப் போகின்றனர் என்பதைக் காட்டும் போட்டியாக, இது அமையவுள்ளது.
இலங்கை அணியைப் பொறுத்தவரை, முதலாவது போட்டியில், அணியின் பந்துவீச்சே மோசமானதாக அமைந்த நிலையில், இரண்டாவது போட்டியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், அணிக்குப் பயனை வழங்கின. குறிப்பாக, அறிமுக சுழற்பந்து வீச்சாளர் வனிது ஹஸரங்க, அறிமுக ஒருநாள் சர்வதேசப் போட்டியிலேயே ஹட்-ட்ரிக் சாதனை படைத்த 3ஆவது பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.
அதேபோல, இளம் சுழற்பந்து வீச்சாளர் லக்ஷான் சந்தகானும் சிறப்பாகப் பந்துவீசி, 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு மாத்திரமல்லாமல், போட்டியின் நாயகன் விருதையும் வென்றிருந்தார். எனவே, இலங்கை அணியின் பந்துவீச்சுக்குப் புதிதாகப் பாய்ச்சப்பட்டுள்ள இளம் இரத்தம், அதிக கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.
அதேபோல், நீண்ட காலத்துக்குப் பின்னர், இம்மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. இறுதியாக, 2 ஆண்டுகளுக்கு முன்னர், ஒருநாள் சர்வதேசப் போட்டியொன்று இடம்பெற்றிருந்தது. அத்தோடு, மைதானத்துக்குள் யானை நுழைவதைத் தடுப்பதற்காக, பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
எனவே, முக்கியமானதொரு போட்டியாகவும், எதிர்பார்ப்புகள் நிறைந்ததாகவும், இந்தப் போட்டி மாறியுள்ளது.
10 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago