2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இலங்கைக்கெதிராக நியூசிலாந்துக்கு தொடர் வெற்றி

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி, 2-0 என்ற கணக்கில் வெற்றிகொண்டுள்ளது. 2ஆவது டெஸ்ட் போட்டியில், கேன் வில்லியம்ஸனின் சிறப்பான துடுப்பாட்டத்தின் உதவியுடனேயே அவ்வணி, இந்த வெற்றியைப் பெற்றுக் கொண்டது.

189 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 5 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களுடன் இன்றைய நாளை ஆரம்பித்த நியூசிலாந்து, மேலதிக விக்கெட்டுகளை இழக்காமல், வெற்றியைப் பெற்றுக் கொண்டது.

78 ஓட்டங்களுடன் இன்றைய நாளைத் தொடங்கிய கேன் வில்லியம்ஸன், தனது 13ஆவது சதத்தைப் பூர்த்திசெய்து, ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களைப் பெற்றார். தவிர றொஸ் டெய்லர், 35 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில், துஷ்மந்த சமீர 4 விக்கெட்டுகளையும் சுரங்க லக்மால் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.

ஹமில்டனில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 292 ஓட்டங்களைப் பெற, நியூசிலாந்து அணியால் 237 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

ஆனால், முக்கியமிகு மூன்றாவது இனிங்ஸில், மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி, ஒரு கட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 71 ஓட்டங்களுடன் காணப்பட்ட போதிலும், பின்னர் 133 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. இது, இலங்கை அணியின் வெற்றிவாய்ப்புகளை மிகவும் குறைத்திருந்தது.

இப்போட்டியின் நாயகனாக, கேன் வில்லியம்ஸன் தெரிவானார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .