Shanmugan Murugavel / 2016 மே 19 , பி.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அழகன் கனகராஜ்
இலங்கை கிரிக்கெட் சபையுடன் தொடர்புடையதான, கடந்த 3 ஆண்டுகளுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக 36 மில்லியன் ரூபாய் (36,313,023) செலவிடப்பட்டுள்ளது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ எழுப்பியிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், இலங்கை கிரிக்கெட் சபையுடன் தொடர்புடையதாக 2013ஆம் ஆண்டு 13 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவற்றுக்கு 21 மில்லியன் ரூபாய் (21,719,000 ) செலவிடப்பட்டிருந்தது.
2014ஆம் ஆண்டில் 11 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றுக்கு 8 மில்லியன் ரூபாய் (8, 615, 073) செலவிடப்பட்டது.
2015ஆம் ஆண்டு 7 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றுக்கு 5 மில்லியன் ரூபாய் (5, 978,950) செலவிடப்பட்டுள்ளது என்று சுட்டிக் காட்டினார்.
இதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி பிரதம கொறடாவும் எம்.பியுமான அநுர குமார திஸாநாயக்க, நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக இலங்கை கிரிக்கெட் சபை செலவளித்துள்ள தொகை, கிராமிய மற்றும் பாடசாலைகள் மட்டத்திலான கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படவில்லை. நிர்வாக சீரின்மை காரணமாக வழக்குகளுக்கு மட்டும் பெருந்தொகை செலவிடப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
மேற்கூறிய கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் தயாசிறி ஜயசேகர, இலங்கை கிரிக்கெட் சபைக்கு நிரந்தரமான சட்ட ஆலோசகர் இல்லை, நிரந்தரமான சட்ட ஆலோசகரை குறைந்த சம்பளத்துக்கு இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால், இவ்வாறான மிதமிஞ்சிய செலவுகளைக் குறைக்கலாம் எனத் தெரிவித்தார்.
15 minute ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
6 hours ago
7 hours ago