Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 26 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிராந்திய அணியான கென்ற்றின் 32 வயதான முன்னாள் துடுப்பாட்ட வீரரான நிக் லீ, இலங்கை கிரிக்கெட் அணியின் உடலியல் பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை, கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) அறிவித்துள்ளது.
இன்னொரு இங்கிலாந்து பிராந்திய அணியான ஹம்ஷயரின் முன்னாள் உடலியல் பயிற்றுநரான மைக்கல் மெய்னையே நிக் லீ பிரதியீடு செய்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு கடந்தாண்டு மே மாதம் மைக்கல் மெய்ன் நியமிக்கப்பட்டிருந்தபோதும், அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரின் முடிவில் தனது பதவியிலிருந்து விலகியிருந்தார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ள நிக் லீ, தற்போது சசெக்ஸ் பிராந்திய அணியின் உடலியல் பயிற்சியாளராக பணியாற்றுகின்றார்.
44 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago