Shanmugan Murugavel / 2016 ஜனவரி 27 , மு.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டிகளின் இரசிகர்களுக்கிடையில், ஏ.ஐ.ஏ நிறுவனம் நடாத்திய கருத்துக்கணிப்பில், ஆர்சனல் அணியின் நட்சத்திர வீரரான மெசூட் ஒஸில், அதிக விருப்புக்குரிய வீரராகத் தெரிவாகியுள்ளார்.
இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரின் அணியான டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர்ஸ் அணியின் அனுசரணையாளராகச் செயற்படும் ஏ.ஐ.ஏ நடாத்திய இக்கருத்துக் கணிப்பில், அவ்வணியின் பரம வைரிகளான ஆர்சனல் அணியின் வீரர் தெரிவாகியுள்ளமை இதில் சுட்டிக்காட்டத்தக்களது.
இங்கிலாந்து பிறீமியர் லீக்குக்கான இலங்கை இரசிகர்களின் பேஸ்புக் பக்கத்தில் இந்தக் கருத்துக்கணிப்பு இடம்பெற்றது. இதிலேயே, ஒஸில் வெற்றிபெற்றார்.
இந்தக் கருத்துக் கணிப்பில், 110,000 பேர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago