Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 3ஆவது போட்டியில், அவுஸ்திரேலிய அணி, 2 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
ரங்கிரி தம்புள்ள சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை அணி, 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 226 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில் தனது நான்காவது சதத்தைப் பெற்ற டினேஷ் சந்திமால், 130 பந்துகளில் 102 ஓட்டங்களைப் பெற்று, இறுதி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் அடம் ஸாம்பா 3, ஜேம்ஸ் ஃபோக்னர் 2, மிற்சல் ஸ்டார்க் 2, ஜோன் ஹேஸ்டிங்ஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
227 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 46 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் ஜோர்ஜ் பெய்லி 70 (99), மத்தியூ வேட் 42 (46), ட்ரவிஸ் ஹெட் 36 (48), ஆரொன் ஃபின்ச் 30 (29) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் அஞ்சலோ மத்தியூஸ், அமில அபோன்ஸோ, டில்ருவான் பெரேரா இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக, ஜோர்ஜ் பெய்லி தெரிவானார்.
19 minute ago
30 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
43 minute ago