Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் தொடருக்கான இந்தியக் குழாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளுக்கான குழாமில் யுவ்ராஜ் சிங் இடம்பிடித்துள்ளதோடு, ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமிலிருந்து சுரேஷ் ரெய்னா நீக்கப்பட்டுள்ளார்.
5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 3 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடர், அடுத்தாண்டு ஜனவரி 12ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
இதில், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் யுவ்ராஜ் சிங், ஆஷிஷ் நெஹ்ரா, ரவீந்திர ஜடேஜா, மொஹமட் ஷமி, உமேஷ் யாதவ், ஹார்டிக் பாண்டியா ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது. இதற்கு முன்னைய தொடரில் இடம்பிடித்த ஸ்ரீநாத் அர்விந்த், ஸ்டுவேர்ட் பின்னி, அமித் மிஷ்ரா, அக்ஸர் பட்டேல், அம்பத்தி ராயுடு, மோகித் ஷர்மா ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.
ஒருநாள் சர்வதெசப் போட்டிகளில், சுரேஷ் ரெய்னா தவிர, ஹர்ஜபன் சிங், ஸ்ரீகாந்த் அர்விந்த், ஸ்டுவேர்ட் பின்னி, ஹர்பஜன் சிங், மோகித் ஷர்மா, அம்பத்தி ராயுடு, புவனேஷ்வர் குமார், அமித் மிஷ்ரா ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. பிரெய்ன்டெர் ஸ்ரான், றிஷி தவான், இஷாந்த் ஷர்மா, மொஹமட் ஷமி, ரவீந்திர ஜடேஜா, மனிஷ் பாண்டே ஆகியோருக்கு, வாய்ப்புக் கிடைத்துள்ளது.
இ-20 குழாம்: மகேந்திரசிங் டோணி, ஷீகர் தவான், றோகித் ஷர்மா, விராத் கோலி, அஜின்கியா ரஹானே, யுவ்ராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, இரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, மொஹமட் ஷமி, ஹர்பஜன் சிங், உமேஷ் யாதவ், ஹார்டிக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஆஷிஷ் நெஹ்ரா.
ஒ.நா.போ குழாம்: மகேந்திரசிங் டோணி, இரவிச்சந்திரன் அஷ்வின், ஷீகர் தவான், றோகித் ஷர்மா, விராத் கோலி, அஜின்கியா ரஹானே, மனிஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா, மொஹமட் ஷமி, அக்ஸர் பட்டேல், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், குர்கிறீட் சிங், றிஷி தவான், பிரெய்ன்டர் ஸ்ரான்.
28 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
7 hours ago