Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 16 , பி.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் – 8 சுற்றுக்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது.
குழு பியில் அயர்லாந்து, ஓமானை ஏற்கெனவே வென்ற இலங்கை, பல்லேகலவில் தற்போது முடிவுக்கு வந்த அவுஸ்திரேலியாவுக்கெதிரான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே சுப்பர் – 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அவுஸ்திரேலியா, ட்ரெவிஸ் ஹெட்டின் 56 (29), அணித்தலைவர் மிற்செல் மாஷின் 54 (27) அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றபோதும் டுஷான் ஹேமந்த (3), டுனித் வெல்லலாகே, கமிந்து மென்டிஸ், துஷ்மந்த சமீர (2), மகேஷ் தீக்ஷனவிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 181 ஓட்டங்களையே பெற்றது.
பதிலுக்கு 182 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, பதும் நிஸங்கவின் ஆட்டமிழக்காத 100 (52), குசல் மென்டிஸின் 51 (38), பவன் ரத்னாயக்கவின் ஆட்டமிழக்காத 28 (15) ஓட்டங்களோடு 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக பதும் நிஸங்க தெரிவானார்.
23 minute ago
32 minute ago
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
32 minute ago
37 minute ago
2 hours ago