Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 14 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் தற்போது முடிவுக்கு வந்த ஓமானுடனான குழு பி போட்டியில் அயர்லாந்து வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத 94 (51), கரெத் டெலனியின் 56 (30), ஜோர்ஜ் டொக்ரலின் ஆட்டமிழக்காத 35 (09) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் ஷகீல் அஹ்மட் 4-0-33-3, ஆமிர் கலீம் 4-0-29-1, நதீம் கான் 4-0-34-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 236 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஓமான், மத்தியூ ஹம்பிறேய்ஸ் (2), பரி மக்கார்தி (2), ஜோர்ஜ் டொக்ரல், ஜொஷ் லிட்டிலிடம் (3) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 139 ஓட்டங்களையே பெற்று 96 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ஆமிர் கலீம் 50 (29), ஹம்மாட் மிர்ஸா 46 (37) ஓட்டங்களைப் பெற்றனர்.
இப்போட்டியின் நாயகனாக லொர்கன் டக்கர் தெரிவானார்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago