Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 13 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் அவுஸ்திரேலியாவுக்கெதிரான குழு பி போட்டியில் சிம்பாப்வே முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் ட்ரெவிஸ் ஹெட், சிம்பாப்வேயை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
அவுஸ்திரேலிய அணியில் கடந்த போட்டியில் விளையாடிய கூப்பர் கொனோலி, ஸ்கேவியர் பார்ட்லெட்டை உடற்றகுதி பெற்ற டிம் டேவிட் மற்றும் பென் டுவார்ஷுஸ் பிரதியிட்டனர்.
சிம்பாப்வேயில் காயமடைந்து தொடரிலிருந்து விலகியுள்ள பிரெண்டன் டெய்லரை டொனி முன்யொங்கா பிரதியிட்டதுடன், முற்பாதுகாப்பாக வேகப்பந்துவீச்சாளர் றிச்சர்ட் நகரவாவுக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில அவரை சுழற்பந்துவீச்சாளர் கிறேமி கிறீமர் அணியில் பிரதியிட்டிருந்தார்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago