Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் வருடம் இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 தொடரில் மீண்டும் அயர்லாந்து அணிக்காக வேகப்பந்துவீச்சாளர் பொயிட் ராங்கின் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதியாக, 2012ஆம் ஆண்டு உலக இருபதுக்கு-20 தொடரில் அயர்லாந்து அணிக்காக பங்கேற்ற ராங்கின், அதன் பின்னர், 2013ஆம் ஆண்டுக்கும் 2014ஆம் ஆண்டுக்குமிடைப்பட்ட பகுதியில் இங்கிலாந்து அணிக்காக 11 போட்டிகளில் பங்கேற்றிருந்தார். அதன் பின்னர், இங்கிலாந்து அணியில் வாய்ப்புக்கள் கிடைக்காத நிலையிலேயே, தற்போது அவர் அயர்லாந்துக்கு மீளத் திரும்புகிறார்.
இதன்படி, இறுதியாக கடந்த வருடம் ஜனவர் மாதம் 17ஆம் திகதி இங்கிலாந்து அணிக்காக பங்கேற் ராங்கின், சர்வதேச கிரிக்கெட் சபை விதிமுறைகளின் படி எதிர்வரும் 18ஆம் திகதி முதல் அயர்லாந்துக்காக மீண்டும் போட்டிகளில் பங்கேற்க முடியும். இந்நிலையிலேயே, ஜனவரி 31ஆம் திகதி முதல் பெப்ரவரி 3ஆம் திகதி வரை இடபெறவுள்ள பப்புவா நியூகினியா அணிக்கெதிரான போட்டியில் அயர்லாந்து சார்பாக பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
28 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
7 hours ago