Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் ஐந்தாம் நிலை டென்னிஸ் வீரரான ஸ்பெய்னின் ரஃபேல் நடால் ஊக்கமருந்து பயன்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டிய பிரான்ஸ் அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் ஹோஸ்லின் பச்சோவுக்கெதிராக நடால் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
ஒரு தடகள வீரனாக, தனது கண்ணியத்தையும் தனது விம்பத்தையும் பாதுகாக்க எண்ணியுள்ளதாகவும் ஆனால், தனது டென்னிஸ் வாழ்வில் தான் கடைப்பிடித்து வந்த அனைத்து விழுமியங்களையும் பாதுகாப்பதாகவும் 29 வயதான நடால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஊக்கமருந்துச் சோதனையில் தோல்வியடைந்தமை காரணமாகவே 2012ஆம் ஆண்டில் ஏழு மாதங்களுக்கு நடால் போட்டிகளில் பங்கேற்கவில்லை என முன்னாள் சுகாதார, விளையாட்டு அமைச்சர் பச்சோ கடந்த மாதம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே, அக்காலப் பகுதியில் தான் தசை நாண் அழற்சியாலும் வைரஸாலும் பாதிக்கப்பட்டிருந்ததாக நடால் தெரிவித்துள்ளார்.
59 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
4 hours ago