2026 மார்ச் 10, செவ்வாய்க்கிழமை

எப்.ஏ கிண்ணம்: நியூகாசிலை வீழ்த்தி காலிறுதியில் சிற்றி

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 08 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு மன்செஸ்டர் சிற்றி தகுதி பெற்றுள்ளது.

விலகல் முறையிலான இத்தொடரில், நியூகாசில் யுனைட்டெட்டின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற அவ்வணியுடனான ஐந்தாவது சுற்றுப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றே காலிறுதிப் போட்டிக்கு சிற்றி தகுதி பெற்றுள்ளது.

சிற்றி சார்பாக ஓமர் மர்மெளஷ் இரண்டு கோல்களையும் சவின்ஹோ ஒரு கோலையும் பெற்றனர். நியூகாசில் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹாவி பார்ன்ஸ் பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .