Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 டிசெம்பர் 20 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
லங்கா பிறீமியர் லீக்கின் (எல்.பி.எல்) இறுதிப் போட்டிக்கு கோல் கிளாடியேட்டர்ஸ் தகுதி பெற்றுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் நேற்றிரவு நடைபெற்ற ஜஃப்னா கிங்ஸுடனான முதலாவது தகுதிப் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இறுதிப் போட்டிக்கு கிளாடியேட்டர்ஸ் தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற கிங்ஸின் அணித்தலைவர் திஸர பெரேரா, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய கிளாடியேட்டர்ஸ், குசல் மென்டிஸின் 85 (53), தனுஷ்க குணதிலகவின் 55 (42), அணித்தலைவர் பானுக ராஜபக்ஷவின் 25 (15), அன்வர் அலியின் 12 (07) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு, 189 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் சார்பாக ரஹ்மனுல்லா குர்பாஸ் 59 (37), வனிடு ஹஸரங்க 29 (15) மாத்திரமே இரட்டை இலக்க ஓட்டங்களைத் தாண்டிய நிலையில், ஏனையோர் நுவான் துஷார, அன்வர் அலி, இசுரு உதான, புலின தரங்க, மொஹமட் ஆமிரிடம் வரிசையாக விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், 16.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 124 ஓட்டங்களையே பெற்று 64 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக மென்டிஸ் தெரிவானார்.
இந்நிலையில், நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள இரண்டாவது தகுதிகாண் போட்டியில் கிங்ஸும் தம்புள்ள ஜையன்ட்ஸும் மோதவுள்ளன.
11 minute ago
11 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
11 minute ago
31 minute ago
1 hours ago