Shanmugan Murugavel / 2021 செப்டெம்பர் 28 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கின் (எல்.பி.எல்), யாழ்ப்பாணத்தை அடிப்படையாகக் கொண்ட அணியை இலங்கையில் பிறந்த பிரித்தானிய தொழில்முனைவரான அல்லிராஜா சுபாஸ்கரன் வாங்கியுள்ளார்.
எல்.பி.எல்லின் முதலாவது பருவகாலத்தில் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் சம்பியனாகியிருந்த நிலையில், இனி அவ்வணி ஜஃப்னா கிங்ஸ் என்றழைக்கப்படும் எனத் தெரிகிறது.
லைக்கா குழுமத் தலைவரான சுபாஸ்கரன் யாழ்ப்பாண அணியை வாங்கியதன் மூலம் அவ்வணிக்கு மேலதிக நிதி மூலம் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அலைபேசி நிறுவனத்தை நடாத்தி வரும் சுபாஸ்கரன், இந்தியாவின் தமிழ்நாட்டில் திரைப்படங்களைத் தயாரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
46 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago