Shanmugan Murugavel / 2021 டிசெம்பர் 08 , பி.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெற்ற கொழும்பு ஸ்டார்ஸுடனான போட்டியில் தம்புள்ள ஜையன்ட்ஸ் வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஜையன்ட்ஸின் அணித்தலைவர் தசுன் ஷானக, தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஜையன்ட்ஸ், பில் ஸோல்ட், நிரோஷன் டிக்வெல்லவின் மூலம் அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றது. பின்னர் 17 (06) ஓட்டங்களுடன் கீமோ போலிடம் டிக்வெல்லவும், உடனேயே டில்ஷான் முனவீர, ஷொய்ப் மஸ்கூட் ஆகியோர் அடுத்தடுத்து அகில தனஞ்சய, சீக்குகே பிரசன்னாவிடம் ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில், அதிரடியாக 62 (34) ஓட்டங்களைப் பெற்ற ஸோல்டும் துஷ்மந்த சமீரவிடம் வீழ்ந்த நிலையில், நஜிபுல்லா ஸட்ரானின் அதிரடியான 54 (40), தசுன் ஷானகவின் 38 (25) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 195 ஓட்டங்களை ஜையன்ட்ஸ் பெற்றது. பிரசன்னா 4-0-21-1, சமீர 4-0-34-3 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு, 196 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஸ்டார்ஸ் சார்பாக, தினேஷ் சந்திமால் 26 (16), டொம் பன்டன் 23 (14), தனஞ்சய டி சில்வா 21 (13), குசல் பெரேரா 20 (11), பிரசன்னா 17 (08), துஷ்மந்த சமீர 15 (07) ஓட்டங்களைப் பெற்றபோதும் எவரும் குறிப்பிடத்தக்க இனிங்ஸை விளையாடாமல் குறிப்பிட்ட இடைவேளைகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்து, 18.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 177 ஓட்டங்களையே பெற்று 18 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில், தரிந்து ரத்னாயக்க 4-0-26-2 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார்.
இப்போட்டியின் நாயகனாக ஸோல்ட் தெரிவானார்.
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026