Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்குமிடையிலான டெஸ்ட் தொடரின் 2ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, 5ஆவது நாளுக்குச் சென்றுள்ளது.
244 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஒரு விக்கெட்டை இழந்து 20 ஓட்டங்களுடன் காணப்படும் நிலையில், 4ஆம் நாளான இன்று , போட்டி இடம்பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை.
நேற்றிரவு பெய்த கடும் மழை, இன்று மதியம் வரை தொடர்ந்த தூறல் ஆகியன காரணமாக, போட்டியை ஆரம்பிப்பதற்கு முடியாது போயிருந்தது.
மைதானம் முழுவதும் மூடப்பட்ட நிலையில், போட்டி இடம்பெறுவதற்கான வாய்ப்பு இல்லையென, இன்று மதியம் 2.55 மணியளவில் நடுவர்கள் முடிவு செய்தனர்.
நாளைக்கும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
19 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
20 minute ago