Editorial / 2017 ஜூலை 17 , மு.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொன்ககாப் தங்கக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில், இலங்கை நேரப்படி நேற்றுக் காலை நடைபெற்ற போட்டிகளில், ஐக்கிய அமெரிக்கா, பனாமா ஆகிய அணிகள் வெற்றிபெற்றன.
பனாமா அணிக்கும் மார்ட்டினிக் அணிக்கும் இடையிலான போட்டியில், 3-0 என்ற கோல் கணக்கில், பனாமா அணி வெற்றிபெற்றது.
ஐ.அமெரிக்காவுக்கும் நிக்கராகுவா அணிக்கும் இடையிலான போட்டியில், 3-0 என்ற கோல் கணக்கில், ஐ.அமெரிக்கா வெற்றிபெற்றது.
இதன்படி, போட்டிகளை நடத்தும் நாடான ஐ.அமெரிக்கா, குழு பி-இல் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. அத்தோடு, காலிறுதிப் போட்டிகளுக்கு, பனாமா அணியும் தகுதிபெற்றது. இக்குழுவில் 3ஆவது இடத்திலுள்ள மார்ட்டினிக் அணி, ஏனைய குழுக்களின் 3ஆவது நிலை அணிகளைப் பொறுத்தே, காலிறுதிக்குத் தகுதிபெறும் வாய்ப்பைப் பெறும்.
26 minute ago
35 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
35 minute ago
40 minute ago
2 hours ago