2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

ஐ.பி.எல்: இறுதிப் போட்டிக்கு பெங்களூருக்கு 102 ஓட்டங்கள்

Shanmugan Murugavel   / 2025 மே 29 , பி.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கு 102 ஓட்டங்களை றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு பெற வேண்டியுள்ளது.

முலான்பூரில் நடைபெற்று வரும் முதலாவது தகுதிகாண் போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பெங்களூருவின் அணித்தலைவர் ரஜாட் பட்டிடார், பஞ்சாப் கிங்ஸை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப், யஷ் தயால் (2), புவ்னேஷ்வர் குமார், ஜொஷ் ஹேசில்வூட் (3), சுயாஷ் ஷர்மா (3), ரொமாரியோ ஷெப்பர்ட்டிடம் வரிசையாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 14.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ்  26 (17), பிரப்சிம்ரன் சிங் 18 (10), அஸ்மதுலாஹ் ஓமர்ஸாய் 18 (12) ஓட்டங்களைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X