Editorial / 2017 டிசெம்பர் 20 , பி.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) அடுத்தாண்டுக்கான ஏலம் அடுத்தாண்டு ஜனவரி 27, 28ஆம் திகதிகளில் பெங்களூரில் இடம்பெறவுள்ளது. அந்தவகையில், தென்னாபிரிக்காவுடனான இந்தியாவின் மூன்றாவது டெஸ்ட் 24ஆம் திகதி ஆரம்பித்து 28ஆம் திகதி முடிவடையவுள்ள நிலையில், இப்போட்டியின் இறுதி இரண்டு நாளிலேயே ஏலம் நடைபெறவுள்ளது.
இதேவேளை, இந்தியன் பிறீமியர் லீக்கிலுள்ள எட்டு அணிகளிடமும் தாம் தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களின் இறுதியான பட்டியலை அடுத்தாண்டு ஜனவரி நான்காம் திகதிக்குள் தருமாறு இந்தியன் பிறீமியர் லீக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஏலத்தில் விடப்படும் வீரர்களின் பட்டியல் அடுத்தாண்டு ஜனவரி 18ஆம் திகதியளவில் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது.
2 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
7 hours ago