Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2025 மே 07 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில், மும்பையில் செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மும்பை, மொஹமட் சிராஜ், அர்ஷாட் கான், சாய் கிஷோர் (2), ரஷீட் கான், ஜெரால்ட் கொயட்ஸி, பிரசீத் கிருஷ்ணாவிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் வில் ஜக்ஸ் 53 (35), சூரியகுமார் யாதவ் 35 (24), கொர்பின் பொஷ் 27 (22) ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு 156 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய குஜராத் ஆரம்பத்தில் சாய் சுதர்ஷனை ட்ரெண்ட் போல்டிடம் இழந்தபோதும் அணித்தலைவர் ஷுப்மன் கில், ஜொஸ் பட்லர் மூலம் வெற்றியிலக்கை நோக்கி நகர்ந்தது.
பின்னர் அஷ்வனி குமார் (2), ஜஸ்பிரிட் பும்ரா (2), போல்டிடம் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி 18 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் மழை குறுக்கிட்டமை காரணமாக 19 ஓவர்களில் 147 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இறுதிப் பந்தில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களுடன் குஜராத் காணப்பட்ட நிலையில் ரண் அவுட்டை அணித்தலைவர் ஹர்திக் பாண்டியா தவறவிட குஜராத் வென்றது. துடுப்பாட்டத்தில் கில் 43 (46), ஜொஸ் பட்லர் 30 (27), ஷெர்ஃபேன் ருதஃபோர்ட் 28 (15) ஓட்டங்களைப் பெற்றனர்.
இப்போட்டியின் நாயகனாக கில் தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
09 May 2025