Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2024 மே 10 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கிலிருந்து (ஐ.பி.எல்) பஞ்சாப் கிங்ஸ் வெளியேற்றப்பட்டுள்ளது.
நேற்றிரவு நடைபெற்ற றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரூடனான போட்டியில் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்தே பஞ்சாப் வெளியேற்றப்பட்டுள்ளது.
இதுவரையில் 12 போட்டிகளில் விளையாடி எட்டுப் புள்ளிகளுடன் பஞ்சாப் காணப்படுகின்ற நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் 12 புள்ளிகளையே பெற முடியும். ஆனால் டெல்லி கப்பிட்டல்ஸும், லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸும் மோதவுள்ள நிலையில், அவற்றிலொன்று குறைந்த பட்சம் 13 புள்ளிகளைப் பெறுமென்ற நிலையிலேயே பஞ்சாப் வெளியேற்றப்பட்டுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பஞ்சாப் கிங்ஸ்
றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு: 241/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: விராட் கோலி 92 (47), ரஜாட் பட்டிடார் 55 (23), கமரன் கிறீன் 46 (27), தினேஷ் கார்த்திக் 18 (07) ஓட்டங்கள்)
பஞ்சாப் கிங்ஸ்: 181/10 (17 ஓவ. ) (துடுப்பாட்டம்: றைலி றொஸோ 61 (27), ஷஷாங்க் சிங் 37 (19), ஜொனி பெயார்ஸ்டோ 27 (16) ஓட்டங்கள்)
போட்டியின் நாயகன்: விராட் கோலி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago