2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஐ.பி.எல் 2022: சர்ச்சையில் அஹமதாபாத் அணி

Editorial   / 2021 டிசெம்பர் 05 , பி.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஹமதாபாத் அணியை வாங்கியுள்ள சி.வி.சி.கப்பிட்டல் நிறுவனம் மீது எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் நடுநிலையான குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் சபையின் 90ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் கொல்கத்தாவில் நேற்று நடை பெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோதே மேற்கண்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

அடுத்த வருடம் இடம்பெறவுள்ள ஐ.பி.எல். தொடருக்கு புதிய வரவான அஹமதாபாத் அணியை ரூ.5,625 கோடிக்கு சி.வி.சி.கப்பிட்டல் நிறுவனம் வாங்கியுள்ளது. 

அந்த நிறுவனம் வெளிநாடுகளில் உள்ள சூதாட்ட நிறுவனங்களுடன் தொடர்பு வைத்து இருப்பதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X