Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 24 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரிலிருந்து விலகுவதாக, பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணியின் வீரர் கெவின் பீற்றர்சன் அறிவித்துள்ளார். அவருக்கு ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்தே, அவர் இவ்வாறு விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராகக் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போட்டியில், துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும்போது காயமடைந்த கெவின் பீற்றர்சன், உடனடியாகவே மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றைப் பகிர்ந்துள்ள கெவின் பீற்றர்சன், 'இந்தியாவிலிருந்து வெளியேறுகிறேன். காயங்களென்பவை, பணியின் ஓர் அங்கம் தான். எனது கெண்டைக்கால் பின்தசையில் மோசமான கிழிவு ஏற்பட்டுள்ளது. சிறந்த வீரர்களை விட்டு விலகுவதையிட்டுக் கவலையடைகிறேன். ஆனால், எனது குடும்பத்துடன் சேர்ந்திருப்பதை எதிர்பார்க்கின்றேன். கோடை காலத்தில் இலண்டனில் இருப்பேன். நவம்பர் வரை விமுறை. இப்போதைக்குச் சென்றுவருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
அஜின்கியா ரஹானே, பப் டு பிளெஸிஸ், கெவின் பீற்றர்சன், ஸ்டீவன் ஸ்மித், மகேந்திரசிங் டோணி என, நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர்களைக் கொண்ட அணியாக இருந்தாலும், பூனே அணி, இத்தொடரில் இதுவரை தடுமாற்றத்தையே வெளிப்படுத்தியுள்ள நிலையில், கெவின் பீற்றர்சனின் இழப்பு, அவ்வணிக்கு இன்னமும் பாரிய இழப்பாக அமையுமெனக் கருதப்படுகிறது.
இந்தத் தொடரில் கெவின் பீற்றர்சன், 4 இனிங்ஸ்களில் 73 ஓட்டங்களை 36.50 என்ற சராசரியில் 119.67 என்ற அடித்தாடும் வீதத்தில் ஓட்டங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago