Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 10, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2024 மே 15 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), டெல்லியில் நேற்றிரவு நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸுடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற லக்னோவின் அணித்தலைவர் லோகேஷ் ராகுல், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி, ஜேக் பிறேஸர்-மக்குர்க்கை ஆரம்பத்திலேயே அர்ஷாட் கானிடம் இழந்தது. எனினும் அபிஷேக் பொரேலும், ஷே ஹோப்பும் வேகமாக ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஹோப் 38 (27), பொரேல் 58 (33) ஆகியோர் குறிப்பிட்ட இடைவெளிகளில் ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக்கிடம் இழந்தது.
பின்னர் அணித்தலைவர் றிஷப் பண்டும் 33 (23) ஓட்டங்களுடன் நவீனிடம் வீழ்ந்தபோதும், ட்ரிடான் ஸ்டப்ஸின் அதிரடியான ஆட்டமிழக்காத 57 (25) 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 208 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு 209 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய லக்னோ, ஆரம்பத்திலேயே ராகுல், குயின்டன் டி கொக்கை பொரேலுக்குப் பதிலாக தாக்கம் செலுத்தும் வீரராகக் களமிறங்கிய இஷாந்த் ஷர்மாவிடம் இழந்ததோடு, மார்க்கஸ் ஸ்டொய்னிஸை அக்ஸர் பட்டேலிடம் இழந்தது.
அடுத்து வந்த நிக்கலஸ் பூரான் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடியபோதும் தீபக் ஹூடா, மொஷின் கானுக்குப் பதிலாக மாற்றுவீரராகக் களமிறங்கிய ஆயுஷ் படோனி ஆகியோர் இஷாந்த், ஸ்டப்ஸிடம் வீழ்ந்தனர். 61 (27) ஓட்டங்களுடன் முகேஷ் குமாரிடம் பூரான் வீழ்ந்ததோடு, குல்தீப் யாதவ்விடம் சிறிது நேரத்தில் குருனால் பாண்டியா வீழ்ந்தார்.
அர்ஷாட் கான் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காமல் 58 (33) ஓட்டங்களைப் பெற்றபோதும் கலீல் அஹ்மட்டிடம் யுட்விர் சிங் வீழ்ந்ததோடு, ரவி பிஷ்னோய் ரண் அவுட்டாக 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களையே பெற்ற லக்னோ 19 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக இஷாந்த் தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago
09 Dec 2024