Shanmugan Murugavel / 2016 ஜூலை 27 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
முழங்கால் காயம் காரணமாக, அடுத்த வாரம், பிரேஸிலின் றியோ டி ஜெனீரோவில் ஆரம்பிக்கவுள்ள ஒலிம்பிக் போட்டி மற்றும் எஞ்சிய பருவ காலத்திலிருந்து சுவிற்ஸர்லாந்து சம்பியனான ரொஜர் பெடரர் தவற விடுகிறார்.
தனது விளையாடும் காலத்தை நீடிக்க வேண்டுமெனில், மேலும் நீண்ட காலத்தை குணமடைய எடுத்துக் கொள்ள வேண்டும் என 17 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றிய பெடரர் கூறியுள்ளார்.
உலகின் மூன்றாம் நிலை வீரரான 34 வயதான பெடரர், பெப்ரவரியில் முழங்கால் சத்திர சிகிச்சை மேற்கொண்டதுடன், முதுகுப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக பிரெஞ்சுப் பகிரங்கத் தொடரை தவற விட்டிருந்தார்.
இந்நிலையில், றியோவில் சுவிற்ஸர்லாந்தை பிரதிநிதித்துவப்படுத்தாமையை அடுத்து மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ள பெடரர், 2016ஆம் ஆண்டின் மிகுதியை தவற விடுவது கடினமாக இருப்பதாக கூறியுள்ளார்.
2008ஆம் ஆண்டு, பெய்ஜிங்கில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற பெடரர், 2012ஆம் ஆண்டு லண்டனில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில், பிரித்தானியாவின் அன்டி மரேயிடம் தோல்வியடைந்தமையே, ஒலிம்பிக் போட்டிகளில், ஒற்றையர் பிரிவில், பெடரரின் அதிசிறந்த பெறுதி ஆகும்.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025