Editorial / 2017 செப்டெம்பர் 11 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் ஸ்லோவன், ஐ.அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில், 6-0 என்ற செட்டை, 1976ஆம் ஆண்டுக்குப் பின் பெற்று, அனைவரையும் விளையாட்டால் கவர்ந்தமை மாத்திரமன்றி, தன்னுடைய உரையாடலாலும், அனைவரையும் கவர்ந்துள்ளார்.
இந்த ஆடுகளத்துக்கு வரும் போது, முன்னைய ஆண்டுகளின் சம்பியன்களின் புகைப்படங்கள், மைதானத்தில் காணப்பட்ட நிலையில், தான் வியர்வையுடன் காணப்படும் புகைப்படத்தையா அவர்கள் பயன்படுத்தப் போகிறார்கள் என்று கவலையடைந்தாக, அவர் சிரித்தவாறே குறிப்பிட்டார்.
இந்த வெற்றி, மேலும் தொடர்களை வெல்வதற்கு அவரைத் தூண்டியுள்ளதா எனக் கேட்கப்பட்டபோது, “ஆமாம், நிச்சயமாக. அந்தப் பெண், எனக்குத் தந்த காசோலையைப் பார்த்தீர்களா? அது (பணத்தின் பெறுமதி) உங்களை, மேலும் டென்னிஸ் விளையாடுவதற்குத் தூண்டாது என்றால், வேறு எது தூண்டும் எனத் தெரியவில்லை” என்று குறிப்பிட்டார்.
தனது நண்பியும் தனது நாட்டைச் சேர்ந்தவருமான மடிசன் கீய்ஸை, இவ்வளவு இலகுவாகத் தோற்கடித்தமை குறித்தும் அவரைப் பற்றியும் கவலையடைகிறாரா எனக் கேட்கப்பட்ட போது, “அவரைப் பற்றிக் கவலையா? அவரும் இறுதிப் போட்டியில் இருந்தார். அவர் பெறவிருந்த காசோலையைப் பார்த்தீர்களா? அவர், பிரச்சினைகளின்றி இருப்பார்” என்று தெரிவித்தார். 2ஆம் இடம் பெற்ற வீராங்கனைக்கு, 1.825 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
46 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago