2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

களத்துக்கு வெளியே நண்பர்களாக இருக்கத் தேவையில்லை

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 17 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியல் மட்ரிட் வீரர்கள், களத்தில் சிறப்பாகச் செயற்படும் வரை, களத்துக்கு வெளியே எவ்வாறு இணைந்து செயற்படுகிறார்கள் என்பது தேவையற்றது எனத் தெரிவித்துள்ளார். இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எனினும், பிறிதொரு கேள்வியின் போது அவர், பதிலளிக்க மறுத்து, ஊடகவியலாளர் சந்திப்பிலிருந்து வெளியேறினார்.

கடந்த வாரயிறுதியில், பார்சிலோனா அணியின் லயனல் மெஸ்ஸி, தனக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை, கோல் கம்பத்தை நோக்கி உதையாமல், அருகில் தட்டிவிட, அதனை லூயிஸ் சுவரேஸ், இலாவகமாகக் கோலாக்கினார். இது, அவ்வணியிலுள்ள வீரர்களுக்கிடையில் நட்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

ஆனால் மறுபுறத்தில், பார்சிலோனா அணியின் வைரி அணியான றியல் மட்ரிட் அணியில், முன்னணி வீரர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கரத் பேல், கரிம் பென்ஸீமா ஆகியோர், அவ்வாறான நட்பைப் பகிர்வதில்லை என்ற கருத்துக் காணப்படுகிறது.

இது தொடர்பாகக் கேட்கப்பட்டபோது, 'மன்செஸ்டர் யுனைட்டெட் அணியில் நான் இருந்த போது, றயன் கிக்ஸ், போல் ஸ்ஹோல்ஸ், றியோ பேர்டினான்ட் போன்ற சில வீரர்களுக்கு, நான் 'ஹாய்" கூடச் சொல்ல மாட்டேன். ஆனால், ஆடுகளத்தில் ஒற்றுமை, சிறப்பாகக் காணப்பட்டது" எனத் தெரிவித்தார்.

'கரப் பேலுடன், வெளியே சாப்பிடப் போகத் தேவையில்லை. களத்திலிருக்கும் போது, என்ன நடக்கிறது என்பது தான் முக்கிமானது. களத்துக்கு வெளியே என்ன நடக்கிறது என்பது தேவையற்றது" எனத் தெரிவித்தார்.

அந்த ஊடகவியலாளர் சந்திப்பில், கடந்தாண்டு நவம்பருக்குப் பின்னர், றியல் மட்ரிட் சொந்த மைதானத்துக்கு வெளியே, ஏன் இன்னமும் கோலொன்றைப் பெற்றுக் கொள்ளவில்லையென, ஊடகவியலாளரொருவர் கேட்டார். 'ஸ்பெய்னுக்கு நான் வந்த பின்னர், சொந்த மைதானத்துக்கு வெளியே என்னை விட அதிகமாகக் கோல்களைப் பெற்ற ஒரு வீரரைச் சொல்லுங்கள். ஒரு வீரரின் பெயரை மாத்திரம் சொல்லுங்கள். உங்களிடம் ஒரு பெயர் இல்லை" எனத் தெரிவித்தார். அந்த ஊடகவியலாளர், தொடர்ந்தும் பேச முற்பட்டபோது, 'சென்று வருகிறேன். நன்றி" எனத் தெரிவித்து அவர், அங்கிருந்து வெளியேறினார்.
இந்தப் பருவகாலத்தில், சொந்த மைதானத்தில் 21 கோல்களையும், 11 கோல்களை வெளியேயும், ரொனால்டோ பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .