Shanmugan Murugavel / 2023 ஏப்ரல் 24 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் நேற்று நடைபெற்ற லண்டன் மரதனில் பெண்களில், ஒலிம்பிக் சுவட்டுப் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்ற சிஃபான் ஹஸன் வென்றிருந்தார்.
முன்னொருபோதும் மரதனை ஓடியிருக்காத ஹஸன், இடுப்புப் பகுதி காயத்தால் அவதிப்பட்டு, உபாதைக்குள்ளாகி ஒரு கட்டத்தில் வீதியோரமாக விலகி உடற்பயிற்சிகளை மேற்கொண்டு அதிலிருந்து விடுபட அவரின் போட்டியாளர்கள் அவரின் கண்ணுக்கெட்டாத தூரத்துக்குச் சென்றிருந்தார்.
எவ்வாறெனினும் நிறுத்தியிருக்காத ஹஸன், இறுதிக் கட்டத்தில் அவருக்குரிய பானத்தை தவறவிட்டு, பின்னர் அதை எடுத்து மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதப் பார்த்து முடிவுக் கட்டத்தில் மின்னல் வேகத்தில் சென்று வென்றிருந்தார்.

இந்நிலையில், ஆண்களுக்கான பந்தயத்தில் கென்யாவின் கெல்வின் கிப்டும் வென்றிருந்தார்.
1 hours ago
1 hours ago
1 hours ago
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
24 Jan 2026