Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் மைதானத்தில் இடம்பெற்ற வலென்சியாவுடனான முதல் சுற்றுப் போட்டியில் 7-0 என்ற கோல்கணக்கில் பார்சிலோனா வென்றிருந்த நிலையில், கடந்த புதன்கிழமை (10) வலென்சியாவின் மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது சுற்றுப்போட்டியில், 1-1 என்ற கோல்கணக்கில் போட்டியை சமநிலையில் முடித்துக்கொண்ட பார்சிலோனா, கோப்பா டெல் ரேயின் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியின் 39ஆவது நிமிடத்தில் வலென்சியாவின் அல்வாரோ நீகிரேடோ பெற்ற கோலுடன், அவ்வணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், மாற்றுவீரராக களமிறங்கிய பார்சிலோனாவின் வில்பிரைட் கப்டௌம், போட்டியின் 84ஆவது நிமிடத்தில் பெற்ற கோலின் மூலம், போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
இப்போட்டியுடன் சேர்த்து, கடந்த 29 போட்டிகளில் பார்சிலோனா தோல்வியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது, ஸ்பானிய கால்பந்தாட்டக் கழக வரலாற்றில் சாதனையாகும்.
இப்போட்டியில் சிறுநீரகப் பிரச்சினை காரணமாக லயனல் மெஸ்ஸி பங்கெடுத்திருக்காததோடு, நேமர், லூயிஸ் சுவரேஸ் உள்ளிட்ட பார்சிலோனாவின் வழமையான விளையாடும் வீரர்களில் பதினொரு பேர், இப்போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
11 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago
2 hours ago